Breaking News

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து

அட்மின் மீடியா
0

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று  நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் பல மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது 


ஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்கள் இதுவரை பல மாவட்டங்களில் ரத்து செய்யப்படுவதாக அந்த அந்த மாவட்ட  நிர்வாகங்கள் அறிவித்துள்ளது

வழக்கமாக தமிழகத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். 

அந்த வகையில் குடியரசு தினமான ஜனவரி 26, 

உழைப்பாளர் தினமான மே 1, 

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 

மற்றும் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 ஆகிய தினங்களில் இந்தக் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். 

இந்த வருடம் கொரானா தாக்கம் காரணமாக கடந்த மே 1 , ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய மூன்று நாட்கள் நடக்க வேண்டிய கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback