மெக்கா மசூதியில் பொதுமக்கள் தொழுவதற்கு அனுமதி..!!
அட்மின் மீடியா
0
சவுதியில் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் தினசரி வழிபாட்டிற்க்கு தற்போது மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது.
தற்பொழுது மக்காவில் உள்ள புனித மசூதியில் வழிபாட்டாளர்களுக்கு கொரோனாவினால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த உம்ராவிற்கும் தற்பொழுது பகுதியளவு தடை நீக்கப்பட்டு இந்த மாதத்தில் இருந்து குறிப்பிட்ட அளவில் வழிபாட்டாளர்கள் உம்ரா செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புனித மசூதியில் சவூதி நாட்டவர்களும் சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களும் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புனித மசூதியில் இன்று காலை (ஃபஜ்ர்) தொழுகை முதல் வழிபாட்டாளர்கள் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
Tags: மார்க்க செய்தி