Breaking News

ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம்! இனி காசோலை மோசடிக்கு வாய்ப்பு இல்லை – ரிசர்வ் வங்கி அதிரடி

அட்மின் மீடியா
0

ரூ.50 ஆயிரத்திற்கும்மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. 



வாடிக்கையாளரின் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்புள்ளது.


இதை தடுக்க, சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு வாடிக்கையாளர் தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் தற்போது இதில் காசோலை துண்டிப்பு புதிய மாற்றம் கொண்டு வந்துள்ள ரிசர்வ் வங்கி 


ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று புதிய முறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இத்திட்டத்தின் மூலம், ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை கொண்ட காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் குறுந்தகவல், வங்கி செயலி, நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 


அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும்.ரூ.5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். 


https://www.rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=11969&Mode=0

Tags: தமிழக செய்திகள்

Share this