Breaking News

#Breaking: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்!

அட்மின் மீடியா
0

கொரானா ஊரடங்கு காரணமாக அமல் படுத்தபட்ட ஊரடங்கினால் போக்குவரத்து நிறுத்தபட்டது

அதன் பின் பொதுமுடக்கத்திற்கு பின் வெளியூர் சென்று வர அரசுப் பேருந்துகள் இயக்க அனுமதி தரப்பட்டது


அதேபோல் ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளும் 60 சதவீத பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. 


ஆனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. பேருந்துகள் ஓடாத மாதங்களில் கட்ட வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும், 100 சதவீதம் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்தனர். 


இந்நிலையில் பண்டிகைகள் வருவதால் ஆம்னி பேருந்தை இயக்க திட்டமிட்டுள்ளனர்.


எனவே நாளை மறுநாள் அக் 16 ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback