Breaking News

இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க சைபர் கிரைம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

ஆக்சிமீட்டர் இரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜனின் அளவை சரிபார்த்து அவர்களின் இதயத் துடிப்புகளைக் கண்காணிக்கும் கருவியாகும். குறிப்பாக சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனின் சதவீதத்தைக் கண்காணிக்க இந்த பயன்பாடுகள் உதவுகின்றன.


ஆனால் உங்கள் மொபைல் மூலம் உங்கள் ஆக்ஸிஜனின் அளவை சரிபார்த்து கொள்ளலாம் என அறியப்படாத URL களில் இருந்து ஆக்ஸிமீட்டர் பயன்பாடுகளைப் டவுன்லோடு செய்வதை தவிர்க்கவேண்டும் 

இந்த பயன்பாடுகள் பயனர்களின் உடலில் ஆக்ஸிஜனின் அளவை சரிபார்க்க உதவும் என கூறி போலியான தகவல்கள் பரவி வருகிறது. 

இதை டவுன்லோடு செய்தால் உங்கள் தொலைபேசியிலிருந்து போட்டோஸ், தொடர்புகள் மற்றும் பிற தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக  மத்திய அரசின் சைபர் டோஸ்ட் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்லது



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback