Breaking News

இன்று மூன்றாவது சனிக்கிழமை ரேசன் கடைகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேசன் கடைகளுக்கு விடுமுறை- அரசு அறிவிப்பு



இன்று நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை செய்தனர்.

நியாய விலை கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர். 

எனவே, விடுமுறை நாட்களிலும் நியாய விலை கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு, பதிலாக இந்த மாதம் செப்டம்பர் 19-ஆம் தேதி, வரும் அக்டோபர் 17, நவம்பர் 21 ஆகிய தேதியில் அதாவது, மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை (இன்று ) நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback