Breaking News

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மீதான தடை நீக்கம்.. துபாய்க்கு இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பயணியை ஏற்றி வந்ததால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துபாயில் விமான சேவை வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

 

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 நாட்களுக்கு அந்த விமானங்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருவதோ அல்லது செல்வதோ கூடாது என துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. 

அந்த அறிவிப்பில் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 15 நாட்களுக்கு அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் சார்ஜாவில் இருந்து மாற்று விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலையே இந்த முடிவு மாற்றப்பட்டது. 

இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback