Breaking News

மணல் கடத்தல் வழக்குகளில் இனி முன் ஜாமீன் கிடையாது-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

அட்மின் மீடியா
0
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் அளிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. 

மணல் கடத்தல்காரர்களால் தான் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஆனால்  வழக்கு வந்தால் முன் ஜாமீன் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்றுவருகின்றது என கூறிய நீதிபதி அவர்கள் இனி மணல் கடத்தல் வழக்குகளில் முன் ஜாமின் கிடையாது என கூறி தமிழகம் முழுவதும், மணல் கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரிய 40 நபர்களின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Share this