இன்ஜினியரிங் இறுதியாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்.. தேர்வு தேதி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும் எனவும் வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அவை நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலம் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்றும், Objective Type வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் ஆன்லைன் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தேர்வுக்கு முன்னதாக Mock Test என்ற பயிற்சித் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் அறிவுறுத்தல்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
