Breaking News

தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் பட்டியல் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 7ஆம் தேதி முதல்  ரயில்களை இயக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. 



மேலும் சிறப்பு ரயில்களின்  முன்பதிவு செப்டம்பர் 5ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாகவே பயணிகள் வர வேண்டும் 

முன்பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பயனசீட்டு  உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் 

கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  • சென்னை சென்ட்ரல் - கோவை   (இண்டர் சிட்டி தினமும்)
சென்னையில் காலை 6.10 மணிக்கு புறப்படும் இண்டர் சிட்டி  மதியம் 2.05 மணிக்கு கோவையை சென்றடையும். 

மறுமார்க்கத்தில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். 

  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்  (இண்டர் சிட்டி சூப்பர் பாஸ்ட் தினமும்)
இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.35 மணிக்கு சென்னை வந்தடையும். 
இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்  ( ஸ்பெசல்சூப்பர் பாஸ்ட் தினமும்)
மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும். 
காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

  • கோவை - மயிலாடுதுறை  ஜன்சதாப்தி சிறப்பு ரெயில்(செவ்வாய் தவிர மற்ற நாட்கள் )
காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். 
இதைப்போல் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடையும்.

  • சென்னை எழும்பூர் - திருச்சி  (மெயின் லைன் தினமும்)
 காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு திருச்சி சென்றடையும். 
காலை 10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு சென்னைக்கு வந்தடையும்.
  • சென்னை எழும்பூர்-  மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ், 

இரவு 9.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை வந்தடையும். 
எழும்பூரில் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மதுரை சென்றடையும்.

  • சென்னை எழும்பூர்-  மதுரை  ( ஸ்பெசல்சூப்பர் பாஸ்ட் தினமும்)
மதுரையில் காலை 7 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு சென்னை வந்தடையும். 
சென்னை  எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும். 

  • சென்னை எழும்பூர்- தூத்துக்குடி ( ஸ்பெசல்சூப்பர் பாஸ்ட் தினமும்)
இரவு 8.05 தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை வந்தடையும். 
இரவு 7.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
  • சென்னை எழும்பூர் -காரைக்குடிக்கு தினமும் 

காலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். இ
எழும்பூரில் மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 காரைக்குடி சென்றடையும்.
மேலும் கீழ் கண்ட ரயில்களும் இயக்கபட உள்ளன


  • சென்னை எழும்பூர் -  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 


  • சென்னை எழும்பூர்- தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ், 


  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ், 


  • சென்னை எழும்பூர் - மேட்டுபாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ்


  • சென்னை எழும்பூர் -செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் 

















Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback