Breaking News

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி வீடியோ காலிலும் புகார் தெரிவிக்கலாம்:

அட்மின் மீடியா
0
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இனி வாரம் 2 நாட்கள் வீடியோ காலிலும் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்துள்ளார். 



சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக 91502-50665 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என துணை ஆணையர் ஜெயலட்சுமி அறிவித்திருந்தார். 
அதன்படி, கடந்த 7-ம் தேதி முதல் இந்த தொலைபேசி எண்ணுக்கான கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

மக்களுக்கான சேவையை விரிவுபடுத்தும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்த குற்றத்தடுப்பு பிரிவு துணைஆணையரை நேரடியாக வீடியோ கால் மூலம் 91502-50665 என்றஎண்ணில் பொதுமக்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மதியம் 12 முதல் 1 மணி வரை அணுகலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this