வணிக வளாகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்கள் இடையே 6 அடி தனிமனித இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும்
வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம்
வாடிக்கையாளர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் இருக்க வேண்டும்
வணிக வளாகங்களுக்குள் நுழையும் முன் உடல்வெப்பநிலையை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கவேண்டும்
வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.
மால்களுக்குள் மக்கள் கூட்டம் கூடுவதற்கும் இசை மற்றும் பொதுநிகழ்ச்சிகளை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
கொரானா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
லிப்ட் மற்றும் நகரும் படிகட்டுகளில் போதிய இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
அடிக்கடி கிருமிநாசினியைக் கொண்டு வணிக வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
வணிக வளாகங்களுக்குள் இருக்கும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
மால்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் நிச்சயம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
