ஆலிம்கள் ,மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு ஜமா அத்துல் உலமா சபையின் கடிதம்
அட்மின் மீடியா
0
கண்ணியமிகு ஆலிம்கள் மற்றும் மஸ்ஜித்களின் நிர்வாகப் பெருமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி யில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதித்த தமிழக அரசு தற்போது வரும் 01.09.2020 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது
ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி யில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதித்த தமிழக அரசு தற்போது வரும் 01.09.2020 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது
இது மிகுந்த மனநிறைவை தருகிறது. அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது
ஆதலால் அனைத்து பள்ளிவாசல்களையும் திறந்து அரசு கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி தொழுகை நடைபெற ஏற்பாடு செய்யுமாறு அனைத்து மஸ்ஜிதுகளின் நிர்வாகப் பெருமக்களை கேட்டுக்கொள்கிறோம்
தொழுகை நடத்துகிறபோது கொரோனா தொற்று பரவலை கவனத்தில் கொண்டு, சமூக இடைவெளி முகக்கவசம் அணிவது, வீட்டிலேயே ஒளு செய்துவிட்டு வருவது கழிவறைகளை மூடி வைப்பது சானிடைசர் பயன்படுத்துவது, சுருக்கமான நேரத்தில் தொழுகையை முடித்துக்கொள்வது ஆகியவற்றில் அதிகப்படியான எச்சரிக்கைகளை கடைபிடிக்குமாறு தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது
மேலும், சளி, காய்ச்சல் போன்றவற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர் பள்ளிவாசல்களுக்கு வருவதையும், தொழுகைக்குப்பின் முஸாஃபஹா (கை குலுக்குவதை) செய்வதையும் தவிர்க்கவும் மேலும் இஷா தொழுகையை அதற்குறிய (வஃக்த்) நேரம் வந்தவுடன் தாமதமின்றி நிறைவேற்றவும்
உலகம் முழுவதிலிருந்தும் கொரோனா நோய்த் தொற்று விரைவில் முற்றிலுமாக நீங்க எல்லாம் வல்ல இறைவன் அருட்செய்வானாக என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
Tags: மார்க்க செய்தி

