விமான விபத்து விரிவான தகவல்கள் ! உதவி எண்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த வந்தே பாரத் சிறப்பு விமானம் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது.
ஏர் இந்தியா விமானம் (1X -1344) துபாயில் இருந்து 184 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உள்பட 191 பேரை ஏற்றிக் கொண்டு கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு இன்று இரவு வந்தது.
இந்த விமானம் இன்று இரவு 7.45 மணிக்கு கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கன மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தானது விமானம் விழுந்த போது இரண்டாக உடைந்தது.
விமான விபத்தின் போது பெரும் மழை பெய்ததால் உடைந்த விமானம் தீப்பிடிக்கவில்லை. இதனால் உயிர்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் உடைந்து கிடக்கும் விமான பாகத்தை மீட்டப்பிறகே உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரம் குறித்து முழு விவரம் கிடைக்கும் என்று தெரிகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. 10திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கியிருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகள் குறித்த விவரம் அறிய 0495 - 2376901 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
கோழிக்கோடு ஆட்சியர் அறிவிப்பு
Tags: வெளிநாட்டு செய்திகள்