Breaking News

தமிழகத்தில் புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் புனித முஹர்ரம் மாதம் ஆரம்பம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் முஹர்ரம் மாத பிறை தேட வேண்டிய நாளான  20-08-2020 அன்று வியாழக் கிழமை மக்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது!

எனவே நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் நிறைவுற்றது!

எனவே இன்ஷா அல்லாஹ்   20-08-2020  அன்று இரவு நேரம் முதல் ஹிஜ்ரி 1442 புனித  முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகிறது
ஆஷுரா நோன்பு குறித்த அறிவிப்பு

முஹர்ரம் 9,10 ஆகிய தினங்களில் ஆஷுரா நோன்பு நோற்க வேண்டும்!

தமிழகத்தில் 29-08-2020- சன்கிக்கிழமை ,30-08-2020 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரு நாட்கள் ஆஷூரா நோன்பு நோற்க வேண்டிய நாட்களாகும்!

முஹர்ரம் 10ம் நாள் மற்றும் ஆஷுரா நோன்பின் பின்னணி:

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுங்கோலன் ஃபிர்அவ்னையும் அவன் கூட்டத்தாரையும் அழித்து மூஸா(அலை) அவர்களையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் முஹர்ரம் 10ம் நாளில் காப்பாற்றினான்!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 2083.

Share this