Breaking News

உடற்பயிற்சி கூடங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
உடற்பயிற்சி கூடங்களுக்கான  வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு


தமிழகத்தில், உடற்பயிற்சிக் கூடங்கள், 10ம் தேதி முதல் செயல்பட, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் துறை நேற்று வெளியிட்டது.


அதில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, உடற்பயிற்சிக் கூடங்கள், அப்பகுதி இயல்பான பகுதியாக அறிவிக்கப்படும் வரை திறக்கக் கூடாது. என்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.அதில்


உடற்பயிற்சிக் கூடத்தில், 50 வயதிற்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணியர், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொருவருக்கும் இடையே, 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 

உடற்பயிற்சி செய்யும்போது, முகத்திற்கு கவசம் அணிந்து கொள்ளலாம். 

அடிக்கடி கைகளை சோப்பால் கழுவ வேண்டும். 

உடற்பயிற்சிக் கூடத்தில் துப்புவதை, தடை செய்ய வேண்டும்.

ஒரு குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் இடையே, குறைந்தது, 15 முதல், 30 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். 

நோய் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் பணியாளர்கள் உட்பட, யாரையும் அனுமதிக்கக் கூடாது

உடற்பயிற்சிக்கு மேற்கொள்ள வருபவர்கள் அவர்களது பெயர், தொலைபேசி எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி செய்யக் கூடியவர்கள், அதற்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தொட்டு பயன்படுத்தும் முன் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

உடற் பயிற்சி நிலையத்தை திறக்கும் போதும் மீண்டும் மூடும்போதும் முழுவதுமாக கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி நிலையங்களில் ஏசி பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அதன் வெப்பநிலை 27 டிகிரி லிருந்து 30 டிகிரி மட்டுமே இருக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback