பெங்களூரில் கலவரம் தற்போதைய நிலவரம்...........
அட்மின் மீடியா
0
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்த போஸ்ட் குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் நவீனுக்கு எதிராக புகார் அளித்துளார்கள்அந்த புகார் மீது பெங்களூர் டிஜே ஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்ற கோபத்தில் அங்கு ஒரு தரப்பினர் கலவரத்தில் குதித்து உள்ளனர்.
போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி அங்கிருக்கும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.மேலும் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மேலும் கலவரம் தொடர்பாக இதுவரை 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது, நவீன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
145 people arrested till now in connection with violence in Bengaluru over an alleged inciting social media post: Sandeep Patil, Joint Commissioner of Police (Crime) Bengaluru #Karnataka (file pic) pic.twitter.com/A1Mfw3bT8j— ANI (@ANI) August 12, 2020
Tags: இந்திய செய்திகள்