Breaking News

FACT CHECK: பிளாஸ்மா நன்கொடையாளர்கள் என தவறாக பரவும் பட்டியல்? உண்மை என்ன??

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  அன்பிற்குரிய நண்பர்களே.. கோவிட் சிகிச்சைக்கு பிளாஸ்மா தேவைப்படும் பிளாஸ்மா நன்கொடை செய்யத் தயாராக உள்ள ஒரு குழுவிலிருந்து: நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம் என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த போன் நம்பர்கள் உள்ள பட்டியல் பிளாஸ்மா நன்கொடையாளர்களுடையது இல்லை மாறாக அந்த பட்டியல் இரத்ததானம் செய்பவர்களின் பட்டியல் ஆகும்

மேலும் அந்த பட்டியல் கடந்த 2015 ம் ஆண்டு முதலே இணையத்தில் வலம் வருகின்றது

மேலும் அந்த பட்டியலில் உள்ள நம்பர்களில் பெரும்பாலும் உபயோகத்தில் இல்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback