ஓமானில் டிரைவிங் லைசென்ஸை இனி ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்..!!
அட்மின் மீடியா
0
ஓமான் நாட்டில் ஜூலை 12 ம் தேதி முதல் தங்கள் ஓட்டுநர் அடையாள அட்டையை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் ஓமான் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களது காலாவதியான ஓட்டுநர் அடையாளஅட்டையைகாவல்துறையின் https://www.rop.gov.om/english/traffic_services.html ஜூலை 12 ம் தேதி முதல் மின்னணு முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் புதுப்பித்த ஓட்டுநர் அடையாள அட்டையை பயனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருக்கும் ROP சேவை மையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
