Breaking News

அமீரக விசாக்கள் நாளை முதல் புதிய விதிமுறை வெளியிட்டுள்ள அமீரக அரசு..!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாள மற்றும் தேசியத் துறையினால் வெளியிடப்பட்டிருந்த முடிவுகளில் அமீரக அமைச்சரவை தற்பொழுது பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளது


கொரானா ஊரடங்கினால் அமீரகத்தின் அனைத்து விசாக்கள், மற்றும் Entry Permits இந்த ஆண்டு இறுதிவரையில் செல்லுபடியாகும் என அமீரக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ரெசிடென்சி விசா, நுழைவு அனுமதி என  அனைத்தும் நாளை 12.07.2020 ஆம் தேதியிலிருந்து செல்லாது என அறிவித்துள்ளது


கேள்வி 1: 

அபராதம் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய காலக்கெடு எப்போது?

பதில்
ஜூலை 12, 2020 முதல் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளுக்கு கட்டணங்களை வசூலிக்கத் தொடங்கும் என அறிவைக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை புதுப்பித்துக்கொள்ள சலுகை வழங்கப்பட்டுள்ள காலங்களில் அபராதம் வசூலிக்கப்படாது என்றும் சலுகை காலம் முடிந்த பின்னரும் தங்களது ஆவணங்களை புதுப்பிக்காமல் இருப்போருக்கு அபராதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

கேள்வி 2: 
ஆவணங்களை புதுப்பிக்க வழங்கப்பட்டுள்ள அவகாசம் எத்தனை நாள்?

பதில்
மூன்று மாதங்கள் தங்கள் காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது. 

மேலும், அமீரகத்திற்கு வெளியே 6 மாதங்களுக்கும் குறைவாக தங்கியிருந்த மக்கள் அமீரகத்திற்கு திரும்பி வந்த நாளிலிருந்து தங்களது காலாவதியான ஆவணங்களை புதுப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேள்வி 3 : 

மார்ச் 1 முதல் காலாவதியான விசாவை கொண்டு வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்!!

பதில்

வெளிநாடுகளில்  6 மாதங்களுக்கு மேல் தங்கியிருக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து துவங்கப்படும் பட்சத்தில் அமீரகம் திரும்புவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback