கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கர்நாடக மாநிலத்தில் இனி எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் இன்று மாநில மக்களிடையே முதல்வர் எடியூரப்பா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் நாளை முதல் எந்தவிதமான ஊரடங்கும் கிடையாது.
மேலும் இனிவரும் நாட்களில் கர்நாடகாவின் எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆனால் கொரானாவை தடுக்க மக்கள் அரசுக்கு துணையாக நிற்க வேண்டும் என்றும், முகக் கவசம் சமூக இடைவெளி ஆகிய விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகள் பின்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.