Breaking News

பிளாஸ்மா வங்கி - சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திறப்பு

அட்மின் மீடியா
0
உலகை ஆட்டிபடைக்கும் கொரானாவிற்க்கு இதுவரை எங்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை பல நாடுகளின் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டுள்ளனர். 



இந்நிலையில் பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்க்காக தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்மா வங்கியை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். 

இந்த பிளாஸ்மா வங்கி மூலம் ஒரே நேரத்தில் 7 பேரிடம் செல்களை பிரித்து எடுக்கலாம் மேலும் இந்தியாவிலேயே இரண்டாவதாக பிளாஸ்மா வங்கி சென்னையில்தான் தொடங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா வங்கி மூலம் ஒரே நேரத்தில் 7 பேரிடமிருந்து பிளாஸ்மா செல்கள் பிரித்து எடுக்க முடியும். ஒருவருக்கு பிளாஸ்மா செல்கள் எடுக்க 40 நிமிடம் வரை நேரம் எடுக்கும். 

பிளாஸ்மா சிகிச்சை என்பது

கொரோனா நோய் தாக்கி, அதிலிருந்து பூரணமாக குணம் அடைந்தவரின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாவை எடுத்து நோயால் பாதிக்கப்பட்டிருப்பவருக்குச் செலுத்துவதாகும். 

நோய் தாக்கியவர் குணமாகி 14 நாள்கள் கழித்து தங்கள் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைத் தானமாகக் கொடுக்க முடியும்.

18 வயது முதல் 65 வயதுள்ளவர் வரை பிளாஸ்மா தானம் கொடுக்க இயலும். 


Tags: தமிழக செய்திகள்

Share this