Breaking News

டிக்டாக்கிற்க்கு போட்டியான சிங்காரி ஆப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?வாங்க தெரிந்து கொள்ளலாம்

அட்மின் மீடியா
0
நாட்டில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சிக்கல்களை மேற்கோளிட்டு பிரபலமான 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்துள்ளது. அதில் மிகவும் முக்கியமாக டிக்டாக் செயலியும் தடை செய்யப்பட்டுள்ளது



இந்நிலையில் டிக்டாக்கிற்க்கு மாற்றாக இந்திய செயலியான சிங்காரி ஆப் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது.

இதில் கணக்கை உருவாக்குவதற்கு தொலைபேசி எண்களை பதிவு செய்து சரிபார்ப்பு முடிந்தபின் நீங்கள் ஆப்பினை உபயோகிக்கலாம்

மேலும் சிங்காரி செயலியில் தாங்கள் விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தலாம். இதில் பயன்பாடு, வீடியோக்கள் மற்றும் விளையாட்டு மண்டலம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆப்பில் கூடுதலாக ஒரு அம்சம் என்னவென்றால் நீங்கள் வீடியோக்களின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் ஆம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி இந்த ஆப்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டாக்கில் இந்த அம்சம் இல்லாதது சிங்காரி செயலிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.


சிங்காரி செயலியில் குறுகிய கால வீடியோ பயன்பாட்டின் மூலம் பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. வீடியோ வைரலாகியதன் அடிப்படையில் பணம் வழங்கப்படுகிறது. 


சிங்காரியில் உங்களது வீடியோ வேகமாக பரவினால் அதற்கு பணம் கிடைக்கும். 

உங்களது வீடியோவை யாராவது பார்த்தால் அதற்கு ரிவார்ட் பாய்ன்ட் கிடைக்கும். 

அதிகமாக பாய்ன்ட் கிடைக்கும்போது அது பணமாக மாறி உங்கள் கைக்கு வரும் என்று கூறப்படுகின்றது



Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback