சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிவதில் சிக்கல்..! அந்த அந்த பள்ளிகளில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது மேலும் நாடு முழுவதிலும் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் முடிவுகளை தெரிந்து
கொள்வதற்காக ஒரே நேரத்தில் இணையதளத்தில் முயற்சி செய்ததால் இணையதள பக்கத்தில் கோளாறு
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் மாணவர்கள் முடிவினை அறிந்து கொள்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்சி
மாணவர்களுடைய மதிப்பெண் மற்றும் முடிவு விவரங்கள் மாணவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து முடிவினை தெரிந்து கொள்ளலாம் எனவும் இணைய தள பக்கத்தை சரி செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
As informed by NIC there is a technical issue in accessing cbse results. The same is likely to resume in two hours . However , complete results have been sent to all schools and students can obtain their results from schools. The results are also being pushed through Digilocker— CBSE HQ (@cbseindia29) July 13, 2020
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
