Breaking News

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் -இந்திய ராணுவம் அதிரடி!

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பு தகவல்கள் திருட்டு நடைபெற வாய்ப்பு உள்ளதால் இந்திய ராணுவம், தடை செய்யப்பட்ட செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், ட்ரூகாலர் வி சாட், ஹலோ, ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், ஜூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவத்தினர், மற்றும் ஆயுதப்படையினர் தங்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் ஜூலை 15ம் தேதிக்குள் நீக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது



Tags: இந்திய செய்திகள்

Share this