மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
அட்மின் மீடியா
0
முதல்வர் பழனிசாமி அவர்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது
அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த கல்வி தொலைகாட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
உள் ஒதுக்கீடு மூலம் சுமார் 500 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்