தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
அட்மின் மீடியா
0
தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளில் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் பரவலை தடுக்க நம் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்படுகின்றது
தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.வழக்கின் முந்தையை விசாரணையில் தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக அரசு, 75% கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது தற்போது 25%கல்வி கட்டணமும்,
பள்ளிகள் திறந்த பிறகு 25% கல்வி கட்டணமும்,
பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% கல்வி கட்டணமும்
என மூன்று தவணைகளாக கல்வி கட்டணம் கட்ட தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இவ் வழக்கின் இடைக்கால உத்தரவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அளிக்கப்படும்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்