Breaking News

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் -தமிழக அரசு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரானா ஊரடங்கு முதல் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த ஜூன் மாதம் வரை இலவச பொருட்கள் இருந்த நிலையில், ஜூலை மாதமும் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இந்நிலையில்  குடும்ப அட்டைதார்களுக்கு வருகிற நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

இம்மாதத்திற்கான இலவச ரேஷன் பொருள்கள் அறிவிப்பு கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியானது. எனவே, ஜூலையில் முதல் மூன்று நாள்கள் மக்கள் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கியிருந்தால், ஆகஸ்ட் மாதம் அது ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை அடுத்த மாதம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Share this