ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் சவூதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ம் நாளன்று ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும்.
அதன்படி, இன்று 12.07.2020 இஸ்லாமிய மாதமான துல் காய்தா மாதத்தின் 30 ஆம் தேதி என்றும், ஜூலை 22 துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் என்றும் சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் எப்போதும் துல் ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் கொண்டாடப்படும் என்பதால், வரும் ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் என்றும் சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் தொடக்க நாளை சவூதி அரேபியாவில் இருக்கும் பிறை பார்க்கும் கமிட்டி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Tags: மார்க்க செய்தி