FACT CHECK: தாவுத் இப்ராஹிம் கொரானாவால் இறந்துவிட்டாரா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தாவுத் இப்ராஹிம் கொரானாவால் இறந்துவிட்டார் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இவர் பாகிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது.
இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இராணுவ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாகவும் .அவர் இறந்துவிட்டார் என்று கடந்த 2 தின்ங்களாக இந்த செய்தி பல ஊடகங்கள் தெரிவித்து வந்த நிலையில் தாவுத் இப்ராஹிம் அவர்களின் சகோதரர் அனீஷ் இப்ராஹிம் அந்த தகவலை முற்றிலும் ம்றுத்துள்ளார்
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானில் வணிகத்தை நடத்துவதாகவும், தாவூத்தின் சகோதரர் அனீஷ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி