Breaking News

FACT CHECK: :புதுக்கோட்டை அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக பரவும் வதந்தி:

அட்மின் மீடியா
0
புதுக்கோட்டையில்  ராணுவ ஹெலிகாப்டர் ஏதும் விபத்துக்குள்ளாகவில்லை மேலவசந்தனூர் கண்மாய் பகுதியில் காய்ந்த முட்கள் மட்டுமே எரிந்துக் கொண்டிருக்கின்றன என மாவட்ட நிர்வாகம் புதுக்கோட்டை அருகே மேலவசந்தனூர் கண்மாயில் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்து எதுவும் நடைபெறவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்து   பேயடிக்கோட்டை அருகே உள்ள செங்காளம் வைந்தலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹெலிகாப்டரில் எத்தனை பேர் பயணம் செய்தனர்? அவர்களின் கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

தற்போது விழுந்த ஹெலிகாப்டர் எரிந்த நிலையில் இருப்பதால் விபரம் தெரியவில்லை. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளார்கள் என பல வதந்தி செய்திகள் பரவி வருகின்றது

இது தான் அந்த வீடியோ புகைபடம் எனவும் வீடியோ என வதந்தி பரவியது

பலரும் செய்தியில் கொடுத்துள்ள புகைப்படம் அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல் நகரில் கடந்த 28.01.2020 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைபடம் அது

அட்மின் மீடியா ஆதாரம்:



Tags: FACT CHECK தமிழக செய்திகள்

Share this