FACT CHECK: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தோண்டும் போது கிடைத்த ராமர், சீதா சிலைகள் ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட தோண்டும் போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமர் , சீதா சிலை கண்டுபிடிப்பு என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
ஜார்கண்ட் மாநிலம், பந்தரா பஞ்சாயத்த், குந்தி மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கா கிராமத்தில் ந்கழ்ச்சி ஒன்றுக்காக தோண்டும் போது அந்த சிலைகள் கிடைத்ததாக கடந்த 05.01.2019 அன்று செய்தி கிடைத்தது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது அயோத்தில் நடந்தது போன்று பொயாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
