Breaking News

FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள் என்ற வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் துவங்கியது. என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த தாக்குதல் இல்லை

மேலும்  அந்த பெட்ரோல் பங்க் தாக்குதல் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒடிசாவில் நடந்தது

ஒடிசா மாநிலம், புரி நகரில் வாடிக்கையாளர்களுக்கு பாட்டிலில் பெட்ரோல் குறைவான அளவில் கொடுத்ததற்க்காக அந்த பகுதி உள்ளூர் மக்கள் அந்த பெட்ரோல் நிலையத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this