Breaking News

FACT CHECK: கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானைக்கு இறுதிச் சடங்கு செய்யும் புகைப்படம் என பரவும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கேரளா அன்னாசிப்பழ வெடியால் உயிரிழந்த யானைக்கு இறுதி சடங்குகள் செய்யபட்ட  புகைப்படம் என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.

                                


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த புகைபடத்தை பார்த்தவுடன் இது தற்போது எடுக்கபட்ட புகைப்படம் இல்லை என்று தோன்றியது காரணம் யார் முகத்திலும் மாஸ்க் இல்லை

மேலும் கேரளாவில் பூஜை செய்பவர்கள் அந்த புகைபடத்தில் உள்ளவர்கள் போல் இருக்கமாட்டார்கள் என்று தோன்றியது

அந்த சந்தேகங்கலுடன் நாம் தேடியதில் அந்த புகைபட சம்பவம் கேரளாவில் நடந்தது இல்லை என்று தெரிந்தது

அந்த புகைபடம் கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடகாவில் இறந்த கௌரி என்ற யானையின் இறுதிச் சடங்கு காரியத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்

ஆனால் சிலர் அந்த புகைபடத்தை கேரளாவில் நடந்த சம்பவத்தோடு பொய்யாக  தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

அட்மின் மீடியாவின் ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this