FACT CHECK: ”ஓ” பாசிட்டிவ் குருப் இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்காதா ?- உண்மை என்ன? ஆதாரங்களுடன்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓ பாசிட்டிவ் குருப் ரத்தம் கொண்டவர்களை கொரானா தாக்காது என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கடந்த 09.06.02020 அன்று 23andMe எனும் ஆய்வு நிறுவனமொன்று அவர்கள் ஆயுவு செய்த முடிவை வெளியிட்டுள்ளார்கள்
அந்த ஆய்வு என்னவென்றால் கொரானா வைரஸ் பாதித்தவர்கள் மற்றும் குணமாகியவர்களிடம் இருந்து பொதுவான தகவல்களை ஆராய்ச்சி செய்துள்ளார்கள்
அந்த ஆய்வில் கிட்டத்தட்ட 7,50,000 பேரிடம் தகலில், ” ஓ ” பாசிட்டிவ் இரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு 9 முதல் 18 சதவீதம் குறைவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ” ஏ ” பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக உள்ளதாக அவர்களின் ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.
அதன்படி ஏ குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதையும் ஓ குருப் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிக்கவில்லை என்பதையும் காட்டியதாக கூறினார்கள்.
ஆனால் அந்த ஆய்வு முடிவில் ஓ பாசிட்டிவ் இரத்தம் கொண்டவர்களுக்கு கொரானா வரவே வராது என எங்கும் கூறவில்லை
அதாவது ஓ இரத்தம் கொண்டவர்களையும் கொரானா தாக்கும் ஆனால் மற்ர குருப் இரத்தம் கொண்டவர்களை விட விகிதம் குறைவாக உள்ளது என தான் கூறியுள்ளார்கள்
ஆனால் சமூக வலைதலங்களில் ஓ” பாசிட்டிவ் குருப் இரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தாக்காது என தகவல் பரவி கொண்டு உள்ளது
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி