FACT CHECK: பார்க்கில் எக்சர்ஸைஸ் செய்த பேய்கள் :வீடியோவின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பார்க்கில் எக்சர்ஸைஸ் செய்த பேய்கள் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சம்பவம் உத்திரபிரதேசத்தில் உள்ள ஜான்சி, நந்தன்பூராவில் உள்ள கன்ஷிராம் என்ற பார்க்கில் நடந்துள்ளது
இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஜான்சி போலிஸார் விளக்கம் அளித்துள்ளார்கள்
அந்த மிஷினில் கிரிஸ் அதிகம் இருப்பதால் அது போல் நடந்துள்ளது என்றும் , இதற்க்கும் பேய்க்கும் சம்மந்தமில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்वायरल वीडियो के बाद मौके पर जाकर जाँच करते हुए @COCityjhansi pic.twitter.com/OymnJtJYXI
— Jhansi Police (@jhansipolice) June 13, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி