FACT CHECK: சென்னை, கோவை, மதுரை யில் கடை திறக்க நேரகட்டுபாடு என பரவும் வதந்தி: யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சி பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் இந்த செய்தி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இப்போது இது போன்ற அறிவிப்புகள் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வரவில்லை.
ஆனால் சிலர் இந்த செய்தி தற்போது அறிவிக்கப்பட்டது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி