Breaking News

#BrekingNews : இந்திய சீன இராணுவங்களுக்கு இடையே மோதல் !தமிழக ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன இடையே நீண்ட நாட்கள் பதற்றம் நிலவி வருகிறது. எனவே இது தொடர்பாக இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . 

இந்நிலையில், லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், நேற்று திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இறந்த மூன்று வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

லடாக் எல்லையில் சீன இராணுவத்தினர் தாக்குதலில் பலியான வீரர்களில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்துள்ளார். 

மேலும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே பேச்சுவரத்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback