FACT CHECK: கொரானாவிலிருந்து ஊரை காப்பாற்ற இளம் பெண்ணின் நாக்கை அறுத்து பூஜை செய்தார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் உத்திரப்பிரதேச மாநிலம் பண்டல் கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக்காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம்..... யானைக்குப் பொங்கிய சங்கிகள் எங்கே...??? விராத்கோலி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பொங்கமாட்டீர்களா...???. என்று ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த பெண்ணின் பெயர் காயத்ரி அவரது வயது 15
அந்த சம்பவம் கடந்த 22.05.2020 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாட்வால் கிராமத்தில் நடந்துள்ளது
மேலும் பலரும் ஷேர் செய்யும் செய்தியில் உள்ளது போல் அந்த பெண்ணின் நாக்கை யாரும் அறுக்கவில்லை
கொரோனா வைரசில் இருந்து கிராமத்தைக் காப்பாற்ற தன்னுடைய நாக்கை அறுத்து சிவன் கோவிலில் வழிபட்டு உள்ளார்
ஆனால் சிலர் அந்த சம்பவததினை பிராமனர் பூஜை செய்து அந்த பெண்ணின் நாக்கை அறுத்துள்ளார்கள் என்பது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
