அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச மாஸ்க்! அரசாணை வெளியீடு!!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா முகக்கவசம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முகக் கவசம்வீதம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த முகக்கவசங்களை கொள் முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்