Breaking News

நிசார்கா புயல் நாளை காலை கரையைகடக்கும்: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

அட்மின் மீடியா
0
தென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள நிசார்கா புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



மேலும் நிசார்கா புயல் கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் தற்போது நிலை கொண்டுள்ளது. 

இது நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்- டாமன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிசார்கா புயல் காரணமாக, மேற்கு இந்திய பகுதிகள், குறிப்பாக மகாராஷ்டிராவின் மும்பை, பால்கர், தானே, ராய்காட், கோவா மற்றும் குஜராத் மாநிலங்களில் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அரபிக்கடலில் நிசர்கா புயல் வலுவடைந்து வருவதையொட்டி, அது தாக்கும் போது ஏற்படும் பாதிப்பின் தேவைக்கு ஏற்ப, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் நிகர்சா புயல் த்ற்போதைய சேட்டிலைட் காட்சிகளை பார்க்க:


Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback