Breaking News

FACT CHECK: மூன்று கண்கள் உள்ள குழந்தை ஜெர்மனியில் பிறந்துள்ளதா? உண்மை என்ன??

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஜெர்மனியில் மூன்று கண்கள் உள்ள குழந்தை பிறந்துள்ளது என ஒரு புகைபடத்தை ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் புகைபடத்தில் உள்ள குழந்தை பொய்யானது போட்டோ ஷாப் செய்யப்பட்டது

மேலும் கடந்த 2013 ம் ஆண்டு சட்டிஸ்கரில் உள்ள ஒரு சத்தீஸ்கரில் உள்ள பட்டபாராவில்  ஒரு பெண் மூன்று கண்களுடன் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

அந்த குழந்தையின் புகைப்படம்



மருத்துவமனை வட்டாரங்களின்படி, குழந்தைக்கு மூன்று கண்கள், இரண்டு தொப்புள் கயிறுகள் மற்றும் தலையில் ஒரு சதைப்பகுதி உள்ளது இந்த குழந்தைக்கு கருப்பையில் சரியான வளர்ச்சியை உருவாக்க முடியவில்லை, இதன் காரணமாக தலையை உள்ளடக்கிய கிரீமியம் எலும்பு அதன் தலையில் உருவாக முடியவில்லை. என கூறுகின்றார்கள் 

ஆனால் அசல் குழந்தையின் புகைபடத்தில் கண்கள் போல் இருக்கும் குழந்தையின் புகைபடத்தை விட்டு பரபரப்புகாக போட்டோஷாப் செய்து உள்ள குழந்தையின் புகைபடத்தை ஷேர் செய்கின்றார்கள்

மேலும்  அந்த குழந்தை பிறந்து 7 வருடம் ஆகியும் தற்போது நடந்தது இங்கு நடந்தது அங்கு நடந்தது என சமூகவலைதளங்களில் பொய் செய்தி அடிக்கடி பரவி வருகின்றது


மேலம் அந்த குழந்தையின் த்ற்போதைய நிலை குறித்து நம்மால் அறிய முடியவில்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback