Breaking News

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. அதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில்  முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



ஜனநாயக கட்சி சார்பாக யார் நிற்க உள்ளார் என போட்டி நிலவியது.அதில், ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பிடன் மற்றும் பெர்னி சாண்டர்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், பெர்னி சாண்டர்ஸ் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.

ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட மாகாணங்களில் பிரைமரி தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் வெற்றபெற்றார். இதனால், ஜோ பிடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

.2009 முதல் 2017 முதல் துணை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜனநாயக கட்சியின் தலைவராக பொறுப்புவகித்துள்ளார். இதன் மூலம் நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்து, ஜோ பிடன் களமிறங்க உள்ளார்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback