பாக்கிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு ராணுவத்தினர் கைது
அட்மின் மீடியா
0
ராஜஸ்தானில் இரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் 29 வயதான விகாஸ் குமார் மற்றும் 22 வயதான சிமன் லால் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான இருவரில் விகாஸ் குமார் ராஜஸ்தானில் அமைத்துள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் முழுநேர பணியாளராகவும், சிமன் லால் பிகானீரில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் மையத்தில் ஒப்பந்த பணியாளராகவும் பணிபுரிவதாக கூறப்பட்டுள்ளது
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஒரு இளம் பெண் மூலம், இருவரையும் உளவு வேலைக்கு பயன்படுத்தியுள்ளது. அந்த பெண் பேஸ்புக் கணக்கு மூலம் விகாஸ் குமாருக்கு அரிமுகமாகியுள்ளார் அதன் பின்பு அந்த பெண், அமித் குமார் என்பவரை, தன் உயரதிகாரி எனக் கூறி, விகாசுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, அமித் குமார், பணத்தாசை காட்டி, விகாசிடம் இருந்து, ராணுவ வெடிமருந்து கிடங்கின் படங்கள், தயாரிக்கப்படும் வெடிமருந்துகள், ஆயுத போக்குவரத்து, உள்ளிட்ட விபரங்களை சேகரித்துள்ளார்.
இதற்காக, கடந்த ஓராண்டில், விகாஸ் குமாரின் சகோதரர் ஹேமந் கணக்கில் 75 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ராணுவ உளவுப் பிரிவிற்கு தெரிய வந்ததை அடுத்து, 'பாலைவன வேட்டை' என்ற பெயரில், விகாஸ் குமாரை பிடிக்க வலை விரிக்கப்பட்டது. அதன்படி, அவர் உளவு பார்த்ததற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இதையடுத்து, விகாஸ் குமார், அவருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய சிமன் லால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags: இந்திய செய்திகள்
