Breaking News

சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிப்போம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சீன தயாரிப்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை வியாபாரிகள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என  - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு



எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக சீனத் தயாரிப்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை முழுமையாக தவிர்ப்போம் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்

சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் வணிகர்களே தியாகத்திற்கு தயாராக இருங்கள்

தேச நலன் கருதி சீனாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் உயிர் நீத்து வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், இனி நமது வணிகர் யாரும் சீன தயாரிப்புப் பொருட்களை வாங்கி விற்பதை முழுமையாக தவிர்த்து, நமது இந்திய தயாரிப்புகளை ஊக்கப்படுத்தி இந்தியனாக இருப்போம் இந்திய பொருட்களையே  சந்தைப் படுத்துவோம் என்ற கோஷத்தோடு தேச நலனை முன்னிறுத்தி அனைத்து வணிகர்களும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க ஓரணியில் திரண்டு சூளுரைப்போம்

ஊரடங்கு அமல்படுத்தப்படாத மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் தங்களின் நிலைமைக்கு ஏற்ப தொற்று நோய் அபாயம் பரவிவிடும் என்ற வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள வணிகர்கள், தங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசு அறிவித்த வழிகாட்டுதல்களின்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களும் கட்டாயம் அரசின் அறிவுரைகளை மேற்கொண்டு கிருமி நாசினி பயன்பாடு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், ஒரே இடத்தில் பலபேர் ஒன்று கூடாமல் இருத்தல் போன்ற அறிவுரைகளை பின்பற்றி அரசு அறிவித்துள்ள கால நேரத்திற்கு முன்கூட்டியே கூட கடைகளை அடைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
இதில் அரசின்தலையிடோ அதிகாரிகளின் அத்துமீறல்களோ உயர் அதிகாரிகளின் மிரட்டல்களோ இருந்தாலோ அல்லது கட்டாயப்படுத்தி கடையை திறக்க மிரட்டல்கள் விடுத்தாலோ உடனடியாக பேரமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒருசில மாவட்டங்களில் அதிகாரிகளின் மிரட்டல்களும், அத்துமீறல்களும் இருப்பது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பேரமைப்பு தமிழக அரசிற்கு கோரிக்கையின் வாயிலாக அதிகாரிகள் அச்சுறுத்தலையும் அத்து மீறல்களையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. வணிகம் செய்வது என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வுரிமைக்கு உட்பட்டது அதில் முரண்பட்ட தலையீடுகள் இருப்பதை பேரமைப்பு வன்மையாக கண்டிக்கிறது

கடைகளுக்கு சீல்வைப்பு, அபராதம் விதிப்பு போன்ற செயல்கள் ஏற்கனவே நலிந்து போயுள்ள வணிகர்கள் மீது தொடுக்கப்படும் பேரிடர்களாகவே எண்ணத் தோன்றுகிறது

அதுபோன்ற செயல்களை எந்த நிலையிலும் அனுமதிக்கக் கூடாது என்பது பேரமைப்பின் கோரிக்கை

கடைகளை திறப்பதும் மூடிக்கொள்வதும் வணிகரின் சுற்றுச்சூழல் நிலைமைக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பேரமைப்பு நிர்வாகிகள் மாவட்ட சூழ்நிலைக்கு ஏற்ப வணிகர்கள் கடை திறந்து மூடும் நேரத்தை முடிவு செய்து அறிவிக்க அறிவு றுத்தப்படுகிறார்கள். இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் வைரஸ் தொற்றால் வணிகர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதுடன், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு வணிக சமுதாயமும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கம் ஒன்றே காரணம் ஆகும்.

இவ்வாறு பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்

Tags: தமிழக செய்திகள்

Share this