முழு ஊரடங்கில் மக்கள் என்ன செய்யலாம் ...என்ன செய்யக் கூடாது ! முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலாகிறது. சென்னையில் ஊரடங்கு அமல் குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி அளித்தார்.
அதில் இந்த 12 நாட்களில் மக்கள் 2கி.,மி தொலைவுக்குள் மட்டுமே மளிகைக் கடை காய்கறிக் கடைக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்றும்
இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அப்படி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார் மேலும் தேவை இல்லாமல் பொது வெளியில் சுற்றுபவர்கள், முகக்கவசம் அணியாமல், தேவையான பாதுகாப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்காதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
வாகனம் ஓட்டுவோர், வெளியில் வருவோர் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
வெளியில் வருபவர்கள் திருமணம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக அனுமதி பெற்றவர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை. முன்னர் வாங்கியிருந்தால் இம்முறை புதுப்பித்து வாங்க வேண்டும்.
Tags: தமிழக செய்திகள்