Breaking News

தலைமை செயலகத்தில் பள்ளிவாசல் திறப்பு குறித்து ஜமா அத்துல் உலமா சபை பேசியது என்ன? முழு விவரம்

அட்மின் மீடியா
0
பள்ளிவாசல் திறப்பு குறித்து இன்று தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் அனைத்து மத தலைவர்கள் கூட்டம்  மாலை நடைபெற்றது 


அந்த கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறுத்து ஜமா அத்துல் உலமா சபை மக்களுக்கு அளித்த விளக்கத்தில்..


இன்று 03.06.2020. தமிழக அரசு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை பங்கேற்று மஸ்ஜிதுகளை திறக்க கோரிக்கை வைத்தது.


கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 

இன்று 03-06-2020 மாலை சுமார் 4.30 மணி அளவில் தமிழக அரசு

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்கள் தலைமையில், காவல்துறை, உள்துறை, உளவுத்துறை, சுகாதாரத்துறை, வஃக்பு வாரியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், இஸ்லாமிய சமயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், துணைப் பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி பங்கேற்றார்.

ஜூன் 8 ஆம் தேதிக்குப் பின்னர், வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை.

ஏற்கனவே சுமார் இரண்டரை மாதங்களாக பள்ளிவாசல்கள் திறக்கப்படாமல் உள்ளது. 

அரசின் கோரிக்கைப்படி, மக்கள் தங்கள் இல்லங்களிலேயே தொழுகையை நிறைவேற்றி வருகின்றனர்.

 குறிப்பாக புனித ரமளான் மாதம், சிறப்பு இரவுகள், பெருநாள் ஆகியவற்றின் சிறப்பு வழிபாடுகளையும் வீட்டிலேயே நிறைவேற்றி வந்தார்.

வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று கூட்டு வழிபாட்டில் ஈடுபட இயலாத நிலை, மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

மக்களின் உணர்வுகளை அரசிடம் தெரிவிக்கும் பிரதிநிதியாக ஜமாஅத்துல் உலமா சபை இருப்பதால், மக்களின் உணர்வை கூடுதல் குறைவின்றி தெரிவிக்க வேண்டிய கடமையை உணர்ந்து சொல்கிறோம். மசூதிகளை திறக்க அனுமதி தாருங்கள். 

சுகாதாரத்துறையின் விதிமுறைகளை பேணி நடந்திட மக்களை நாங்கள் அறிவுறுத்துகிறோம்.


நோய்த்தொற்று ஆபத்தை  மக்கள் உணர்ந்து இருக்கின்ற காரணத்தால் அரசின் வழிகாட்டு நெறிகளை மக்கள் பேணி நடப்பார்கள்.

வீட்டிலேயே ஒளுச்செய்து வருவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிகளை ஏற்று, வழிபாடு நடத்த அனுமதித்தால் மக்களின் ஆன்மீக தேட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைவரின் கருத்துக்களையும் கவனத்துடன் கேட்டறிந்த தலைமைச் செயலாளர் அவர்கள் சுகாதாரத்துறையின் கருத்துகளையும் கேட்டு தங்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்கிறோம் என்றார்.

மேற்கண்ட விஷயங்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளருடன் 03-06-2020 அன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக பதிவு செய்யப்பட்டது என்பதை கண்ணியமிகு ஆலிம் பெருமக்களுக்கு, இஸ்லாமிய கொள்கிறோம். சகோதரர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று கூறியுள்ளார்கள்

Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி

Give Us Your Feedback