Breaking News

புதுச்சேரியில் மாநில எல்லைகள் முழுவதுமாக மூடப்படும் !! முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி

அட்மின் மீடியா
0
கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி , மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சியில் இன்று உரையாடினார். புதுவைப் பேரவையில் இருந்து முதல்வர் நாராயணசாமியும் இந்த உரையாடலில் பங்கேற்றார்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளும் கட்சி மாநிலங்களாக இருந்தாலும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதால் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறோம்.


புதுச்சேரியை பொறுத்த வரை கொரோனா வைரஸ் கட்டுப்பாடாக தான் இருக்கிறது. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் தான் மாநிலத்தில் நோய்த்தொற்று பரவுகிறது. 

எனவே புதுவை மாநில எல்லைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் முழுவதுமாக மூடப்படும். 

சென்னை, விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் எல்லைகளும், 

நாகை, மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வரும் எல்லைகளும் மூடப்படும்.

புதுவைக்குள் வெளிமாநில மக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்குள் இ - பாஸ் கொண்டு வருவோர்களும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மேலும் நாளை முதல் பொதுவெளியில் முககவசம் (Face Mask) அணியாமல் சென்றால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும். 

வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடை பிடிக்கவில்லை என்றால் அபாரதம் அதிகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Tags: இந்திய செய்திகள்

Share this