தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணை வாபஸ்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை தமிழக அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஊரின் பெயரை எப்படி உச்சரிக்கிறோமே அப்படியே ஆங்கிலத்திலும் அதை எழுத வேண்டும் என்பதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது.
உதாரணமாக திண்டுக்கல் என்பது வழக்கத்தில் DINDIGUL என உள்ளது. இதனை THINDUKKAL என மாற்ற வேண்டும் என அரசாணை பிறப்பித்திருந்தது. மொத்தம் 1018 ஊர்களின் பெயர்களை இதேபோல் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்ட்டுள்ளது.இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. புதிய அரசாணையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்பட உள்ளது என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.
We are working on alignment of views by experts on Transliteration standards from Tamil to English. Hopefully, we should get this released in 2/3 days. The GO on the change of English names for Tamil names for places has been withdrawn. Will absorb all feedback & reissue shortly. https://t.co/ol4JOWgCHj
— Pandiarajan K (@mafoikprajan) June 18, 2020
Tags: தமிழக செய்திகள்