Breaking News

முஸ்லிம் கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவரின் பேச்சு -அதிர்ச்சி வைரல் வீடியோ!

அட்மின் மீடியா
0
இஸ்லாமிய  கொரோனா நோயாளிகளுக்கு எதிராக கான்பூர் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர் ஆர்த்தி லால்சந்தானி பேசிய பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


அந்த வீடியோவில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து ஆர்த்தி லால்சந்தானி கூறுகையில் முஸ்லிம் கொரோனா நோயாளிகள் வைரஸ் பரப்ப வந்த பயங்கரவாதிகள் என்று கூறுகிறார். 

மேலும் “அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கு விஐபி சிகிச்சை அளித்து வருகிறோம், எங்கள் வளங்களை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் ” என்று ஆர்த்தி லால்சந்தானி கூறுகிறார். 

மேலும் “தனிமை சிறையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள்.” என்றும் கூறியுள்ளார். 

ஆனால் இந்த வீடியொ சுமார் 70 நாட்களுக்கு முன்பு தப்லீக் ஜமாத்தினருக்கு சிகிச்சை அளிக்கும்போது பேசியது ஆனால் தற்போது அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது

         


சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

 மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..!

Tags: இந்திய செய்திகள்

Share this